யூடியூப் வீடியோவை பார்த்து ஸ்கெட்ச் இளைஞர்... ஒரேநாளில் மடக்கிப்பிடித்த போலீஸ்!!

By sathish kFirst Published May 18, 2019, 11:17 AM IST
Highlights

யூடியூபில் வீடியோவை பார்த்து ஏ.டி.எம்மில் ஸ்கெட்ச் போட்ட டிப்ளமோ என்ஜினீயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

யூடியூபில் வீடியோவை பார்த்து ஏ.டி.எம்மில் ஸ்கெட்ச் போட்ட டிப்ளமோ என்ஜினீயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

கடந்த 14-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் கடலூர் வண்ணாரப்பாளையம் சந்திப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றார். அங்கு அவர் ஒரு ரகசிய எண்ணை பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தின் லாக்கரை திறக்க முயற்சித்து பார்த்தார். ஆனால் லாக்கரை திறக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டார்.

இந்நிலையில் அன்று பகலில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்திருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்குள்ள CCTV வீடியோ காட்சிகளை பார்த்து கொள்ளை முயற்சியை உறுதி செய்து கொண்டனர்.

இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொள்ளை முயற்சி பற்றி துப்புதுலக்க இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள்  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்   அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து பார்த்த போது, கொள்ளையடிக்க முயன்ற அந்த நபர், ஒரு தனியார் கம்பெனியின் சீருடையில் இருந்ததை கண்டு பிடித்தனர். அது புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியாகும். நேற்று பிற்பகலில் அக்கம்பெனியின் ஊழியர்கள் சிலர் புதுநகர் தலைமை தபால் நிலையம் அருகில் பஸ் ஏறுவதற்காக நின்றுகொண்டு இருந்தனர்.

அப்போது அவர்களிடம்  விசாரிக்க சென்ற போது, அதில் ஒரு நபர் தப்பி ஓட முயன்றதும் அவரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் நெல்லிக்குப்பம் கல்கிநகரை சேர்ந்த பிரேம்குமார் என்பதும், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள பிரேம்குமார், ஏ.டி.எம். எந்திரத்தின் லாக்கரை திறப்பது தொடர்பாக யூடியூபில் இருந்த வீடியோவை பார்த்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக பிரேம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக   போலீசார் தெரிவித்தனர். 
 

click me!