வீட்டை விட்டு ஓடிப்போன கள்ளக்காதல் ஜோடி... லாட்ஜில் ரூம் போட்டு செய்த பயங்கரம்!!

Published : May 18, 2019, 11:01 AM IST
வீட்டை விட்டு ஓடிப்போன கள்ளக்காதல் ஜோடி... லாட்ஜில் ரூம் போட்டு செய்த பயங்கரம்!!

சுருக்கம்

குடும்பத்திற்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போன கள்ளக்காதல் ஜோடி, லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

குடும்பத்திற்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போன கள்ளக்காதல் ஜோடி, லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கச்சேரி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சங்ககிரி அருகே உள்ள கருவேப்பிலைப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகள் புஷ்பலதா திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் சக்திவேலுக்கும், புஷ்பலதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதல் மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து புஷ்பலதா வீட்டிற்க்கே சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இது தினமும் நடந்துள்ளது, இந்தவிஷயம் தெரிந்ததும்  வீட்டாரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என நினைத்த இந்த  கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆகவே இருவரும் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். அங்கு உள்ள தனியார் தங்கும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர் உல்லாசமாக இருந்துள்ளனர், பின்னர்  மாலை வரை அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்