ஆசை வார்த்தை கூறி ஸ்டேட் விட்டு ஸ்டேட் அழைத்து சென்று பலாத்காரம்.. சாதியை சொல்லி கழற்றி விட நினைத்த காதலன்.!

Published : Mar 05, 2022, 07:44 AM IST
ஆசை வார்த்தை கூறி ஸ்டேட் விட்டு ஸ்டேட் அழைத்து சென்று பலாத்காரம்.. சாதியை சொல்லி கழற்றி விட நினைத்த காதலன்.!

சுருக்கம்

நானும் ஆசிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் மாரீஸ்வரன் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விருதுநகர் அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஸ்டேட் விட்டு ஸ்டேட் அழைத்து சென்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி(26). இவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நானும் ஆசிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் மாரீஸ்வரன் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் மாரீஸ்வரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மதுரை, சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில் தற்போது மாரீஸ்வரன் தான் வேறு சமுதாயம் என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார். மேலும் அவரது உறவினர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், என்னுடைய குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குவதாகவும் கூறியுள்ளார். 

திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரீஸ்வரன் மற்றும் அவரது குடுபத்தினர் மீது வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி