நடுவானில் பறந்த விமானம்.. தூக்கத்தில் அந்த இடத்தில் கை வைத்த இளைஞர்.. அதிர்ந்து எழுந்த பெண் செய்த காரியம்.!

Published : Mar 04, 2022, 10:54 AM IST
நடுவானில் பறந்த விமானம்.. தூக்கத்தில் அந்த இடத்தில் கை வைத்த இளைஞர்.. அதிர்ந்து எழுந்த பெண் செய்த காரியம்.!

சுருக்கம்

கடந்த பிப்ரவரி 28ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் அபிஷேக் குமார் சிங் (29) என்பவர் அமர்ந்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, விமானம் தரையிரக்கப்பட்ட பின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். 

நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு ஒருவர் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

கடந்த பிப்ரவரி 28ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் அபிஷேக் குமார் சிங் (29) என்பவர் அமர்ந்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, விமானம் தரையிரக்கப்பட்ட பின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். 

பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்  பீகாரின் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்;- நான் சோர்வாக இருந்ததால், தூங்கிவிட்டேன். இருப்பினும், சிறிது நேரம் கழித்து, அவர் என்னை தகாத முறையில் தொடுகிறார் என்பதை உணர்ந்து எழுந்தேன். அவரிடம் கத்தினேன், அவர் என்னை தடுத்தார். உடனே, நான் ஒரு விமானப் பணிப்பெண்ணை அழைத்து என்ன நடந்தது என்று கூறினேன். அவர் அந்த நபரை வேறொரு இடத்தில் உட்காரச் சொன்னார். ஆனால் அவன் மறுத்துவிட்டார் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!