கூட்டு பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்.. கல்லூரி மாணவிகளும் உடந்தை.. காரில் வைத்தும் உல்லாசம்.. பகீர் தகவல்

Published : Mar 02, 2022, 11:41 AM IST
கூட்டு பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்.. கல்லூரி மாணவிகளும் உடந்தை.. காரில் வைத்தும் உல்லாசம்.. பகீர் தகவல்

சுருக்கம்

பள்ளி மாணவியுடன் ஆண் நண்பர்கள் ஒன்றாக இருப்பதை 3 மாணவிகளும் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை வசந்த் கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளி மாணவியிடம் காட்டி மிரட்டி இரவு 10 மணிக்கு மேல்  பாட்டி தூங்கிய பிறகு போன் செய்து வீட்டில் உள்ள மாணவியை காரில் அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னையில் பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 கல்லூரி மாணவிகளுக்கும், ஒரு பள்ளி மாணவிக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 13 வயது மாணவி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் வசந்த் கிரிஷ் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி போதைப்பொருள் கொடுத்தது உல்லாசமாக இருந்ததும் பின்னர் தனது நண்பர்களுக்கு மாணவியை விருந்தாக்கியதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, வசந்த் கிரிஷ்(20), சினிமா துணை நடிகர் ரஞ்சித்(25), விஷால்(20), தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகிய 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலத்தில்;- பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் வசந்த் கிரிஷின் நண்பரான, கல்லூரி மாணவர் விஷால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி படிக்கும் பள்ளியில் படித்து வரும் மற்றொரு மாணவியை காதலித்து வருகிறார். இதனால் தினமும் விஷால் தனது காதலியை பார்க்க பள்ளி அருகே உள்ள பானிபூரி கடைக்கு வருவது வழக்கம். அப்போது மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷூம் உடன் வருவான். அப்போது அதே கடைக்கு பள்ளி மாணவியும் வருவார். அந்த பள்ளி மாணவியை பார்த்த வசந்த் கிரிஷ், அவருடன் நெருக்கமாக இருக்க உதவுமாறு விஷாலிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர், எனது காதலியிடம் மூலம் உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன் என்று உறுதி கூறியுள்ளார். அதன் படி பள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டது. செல்போன் நம்பரையும் வாங்கியுள்ளார். 

அதேசமயம், வசந்த் கிரிஷ் மற்றும் விஷாலுக்கு கஞ்சா மற்றும் ஹூக்கா என்ற போதை பொருள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அதேநேரம் விஷாலுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் திருவொற்றியூரை சேர்ந்த கல்லூரி மாணவி, அவரது தோழியான மற்றொரு கல்லூரி மாணவி ஆகியோருடன் வசந்த் கிரிஷூக்கு ஹூக்கா என்ற போதை பொருள் பயன்படுத்தும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் வார இறுதி நாட்களில் வசந்த் கிரிஷ் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எப்போதும் போதையில் தான் இருப்பார்களாம். அப்போது ஆண் நண்பர்களுடன் கல்லூரி மாணவிகள் நடனமாடியும், உல்லாசமாக இருந்தும் வந்துள்ளனர். வார இறுதி நாள் பார்ட்டிக்கு துணை நடிகர் ரஞ்சித், பேராசிரியர் பிரசன்னாவும் வந்து கலந்து கொள்வது வழக்கம்.

அதன்படி ஒரு நாள் விஷால் காதலி மூலம் பள்ளி மாணவியை வசந்த் கிரிஷ் குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு தனது தோழிகளான 2 கல்லூரி மாணவிகளை வசந்த் கிரிஷ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிறகு மாணவிக்கு ஹூக்கா போதை பொருளை தோழிகள் மூலம் கொடுத்து அவரை வசந்த் கிரிஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  பின்னர், தனது நண்பர்களான கல்லூரி மாணவன் விஷால், துணை நடிகர் ரஞ்சித், பேராசிரியர் பிரசன்னா ஆகியோரும் பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்த பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பள்ளி மாணவி சீரழிக்கப்பட்டதற்கு கல்லூரி மாணவன் விஷாலின் காதலி மற்றும் அவரது தோழிகளான கல்லூரி மாணவிகள் உடந்தை என்று விசாரணையில் தெரியவந்தது. 

பள்ளி மாணவியுடன் ஆண் நண்பர்கள் ஒன்றாக இருப்பதை 3 மாணவிகளும் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை வசந்த் கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளி மாணவியிடம் காட்டி மிரட்டி இரவு 10 மணிக்கு மேல்  பாட்டி தூங்கிய பிறகு போன் செய்து வீட்டில் உள்ள மாணவியை காரில் அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மாணவி பாதிப்புக்குள்ளானதற்கு உடன் படித்த மாணவி மற்றும் 2 கல்லூரி மாணவிகள் தான் உடந்தை என்று கைது செய்யப்பட்ட 4 பேர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..