
ஜெயங்கொண்டம் அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் மெயின்ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி வள்ளியம்மை (80). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது மகன் பழனிசாமியுடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் வள்ளியம்மை இறவாங்குடி கிராமத்தில் உள்ள தனது தங்கை மணி வீட்டிற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்துள்ளார்.
அப்போது சம்பவத்தன்று வள்ளியம்மையின் தங்கை மணி கடலை வயலுக்கு மருந்து அடிக்க காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டதால், மேய்ச்சல் இல்லாமல் பட்டினியாக வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை மேய்ப்பதற்காக அதே பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு சொந்தமான வயலில் ஆடு மேய்த்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்துள்ளார்.