திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த சீத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(18). ஆட்டோ ஓட்டுனர். இவருக்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளனர்.
திருவள்ளூரில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த சீத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(18). ஆட்டோ ஓட்டுனர். இவருக்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளம்பெண்ணை சீத்தஞ்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு விஜய் அழைத்து சென்றுள்ளார். அறிமுகமானவர் தானே அழைக்கிறார் என்று அந்த இளம்பெண் நம்பி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, விஜய்யின் நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் ஏற்கனவே வீட்டில் இருந்துள்ளனர். வீட்டில் அந்த இளம்பெண் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென விஜய் உள்பட மூவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வாளை பொத்தி கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த இளம்பெண் வலியால் கதறி துடித்துள்ளார். இதுதொடர்பாக வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றனர்.
இதன்பிறகு பாதிக்கப்பட்ட இளம்பெண் புள்ளரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த விஜய், சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.