உளுந்தூர்பேட்டையில் பயங்கரம்.. இளம்பெண்ணுக்கு சரமாரி வெட்டு.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்

Published : Apr 29, 2021, 06:21 PM ISTUpdated : Apr 29, 2021, 06:40 PM IST
உளுந்தூர்பேட்டையில் பயங்கரம்.. இளம்பெண்ணுக்கு சரமாரி வெட்டு.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்

சுருக்கம்

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாப்பிள்ளை. இவர் உடல் நலக்குறைவால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் பிரேமா(20). 10-ம் வகுப்பு முடித்துள்ள இவர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை வீட்டின் பின்புறம் அருகில் சென்றுக்கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் பிரேமாவை சரமாரியாக வெட்டினர். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பிரேமா அடிக்கடி சின்னசேலம் அருகில் உள்ள அம்மையகரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலா(30) என்பவர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பிரேமாவின் தாய் மலருக்கு தெரியவரவே அவர் தனது மகளை கண்டித்ததோடு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறினார். 

இதில் மனமாற்றம் அடைந்த பிரேமா தனது காதலை கைவிட்டு தாய் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தார். இதை அறிந்து கொண்ட பாலா இளம்பெண்ணை பலமுறை நேரில் சந்திக்க முயற்சி செய்ததோடு தன்னை காதலிக்கும்படி அவரை வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.காதலிக்க மறுத்த பிரேமாவை அவரது காதலனே கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி