இன்ஸ்டா காதலனை நம்பி வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து சிதைத்து கிணற்றில் வீசிய அரக்கன்

By Velmurugan s  |  First Published Aug 21, 2023, 10:52 PM IST

தென்காசி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி வந்த காதலியை வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள வலசை என்ற கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் கடந்த 10-ம் தேதி சாக்குப் பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இது தொடர்பாக கடையநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.

கையில் குத்தப்பட்டிருந்த பச்சை

Tap to resize

Latest Videos

undefined

அப்பொழுது, அந்தப் பெண்ணின் முகங்கள் அனைத்தும் சிதலமடைந்து காணப்பட்டது. மேலும் அப் பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த எம்.வி என்ற எழுத்தை அடையாளமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ஏதேனும் பெண் காணாமல் போன வழக்கு பதிவாகியுள்ளதா?  என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் டீ பிரேக் எடுத்த தொண்டர்கள்; சிற்றுண்டிக்கு படையெடுத்த உடன்பிறப்புகள்

அடையாளம் காணப்பட்ட பெண்ணின் சடலம்

இந்த விசாரணையின் போது, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வினோதினி என்ற பெண் காணாமல் போய் இருப்பதாக புகார் ஒன்று பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட காவல்துறையை தொடர்பு கொண்ட, தென்காசி மாவட்ட காவல்துறையினர் காணாமல் போன பெண்ணின் அங்கு அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்திய போது, அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சிவகங்கையில் காணாமல் போன வினோதினி என்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வினோதினி தென்காசி மாவட்டத்திற்கு எதற்காக வருகை தந்தார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, காவல் துறையினர் வினோதினியின் செல்போன் எண்ணை கைப்பற்றி, அந்த எண்ணிற்கு கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

குவாட்டரை பங்கிடுவதில் தகராறு 60 வயது முதியவரை கொலை செய்த 18 வயது கிளாஸ்மேட்

இன்ஸ்டாகிராம் காதல்

அந்த விசாரணையின் போது, வினோதினிக்கு கடைசியாக கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோரஞ்சித் என்ற இளைஞர் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, மனோரஞ்சித்தை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்திய போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. அதன்படி, கூலி வேலை செய்து வரும் மனோரஞ்சித்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் வினோதினி என்ற சிவகங்கை பெண் பழக்கமானதும், வினோதினியை மனோரஞ்சித் தீவிரமாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

உண்மையாக உள்ளேன்

தொடர்ந்து, வினோதினி மனோரஞ்சித்தை தவிர வேறு ஒரு சில இளைஞர்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து மனோரஞ்சித், வினோதினிடம் கேள்வி கேட்கவே, 'என்னை நம்பவில்லையா, நான் அப்படிலாம் கிடையாது, உனக்கு நான் உண்மையாக உள்ளேன்' என வினோதினி கூறி மனோரஞ்சித்தை சமாதானம் செய்துள்ளார்.

தென்காசியில் திமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் கணவர் தற்கொலை; காவல்துறை விசாரணை

நடத்தையில் சந்தேகம்?

இந்த நிலையில், மனோரஞ்சித், வினோதினியை நேரில் சந்திக்க வேண்டும் எனக்கூறி தென்காசி மாவட்டத்திற்கு வர வைத்துள்ளார். அங்கு வருகை தந்த வினோதினியுடன், மனோரஞ்சித் பல இடங்களுக்கு சுற்றிய நிலையில், கடந்த 7-ம் தேதி அன்று வினோதினி நடத்தையில் சந்தேகப்பட்டு மனோரஞ்சித்,  வினோதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டையால் தாக்கி கொலை

அப்பொழுது, வினோதினி, 'என்னை நீ நம்பவில்லையா, அப்படி என்றால் என்னை நீ கொன்றுவிடு' என எதார்த்தமாக வினோதினி கூறவே, உடனே ஆத்திரமடைந்த மனோரஞ்சித் அருகே இருந்த கட்டையை எடுத்து வினோதினியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த வினோதினியை, மனோரஞ்சித்தின் சக நண்பர்கள் ஒன்றிணைந்து சாக்குப்பையில் கட்டி வலசை பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசி உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

மேலும்,  மனோரஞ்சித்திற்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், வினோதினியை, மனோரஞ்சித்தும், அவரது நண்பர்களும் ஏதேனும் பாலியல் வன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்தார்களா?  இல்லையேல் மனோரஞ்சித் ஆத்திரத்தில் செய்த கொலைக்கு உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்தில் தற்போது காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளம் மூலம் பழகி ஆண் நண்பரை நம்பி வந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!