காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்..! பிரபல இளம் கிரிக்கெட் வீரர் மீது பெண் பரபரப்பு புகார்

By Ajmal Khan  |  First Published Aug 13, 2023, 10:25 AM IST

பிரபல கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ராஜகோபால் சதீஷ் தனது கர்ப்பத்துக்கு காரணம் என்றும் கொடைக்கானல் அழைத்துச் சென்று அனுபவித்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக மென் பொறியாளர் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். 
 


கிரிக்கெட் வீரர் மீது புகார்

பெருங்குடியில் உள்ள உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்  BE கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி கரிஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும்  கிரிகெட் வீரரான ராஜகோபால் சதீஷ் டிஎன்பிஎல் கிரிகெட் போட்டி மூலமாக அறிமுகமாகி ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணியில் இடம்பெற்று  விளையாடி உள்ளார்.

Tap to resize

Latest Videos

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு சில வருடங்கள் கழித்து ராஜகோபால் சதிஷ் கரிஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்துள்ளனர். இதனையடுத்து  கடந்த 2019ம் ஆண்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி, ராஜகோபால் சதீஷ் பெருங்குடியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு அழைத்து சென்று பலமுறை  தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு

கொரோனா பாதிப்பு கால கட்டத்தில் ராஜகோபால் சதீஷ் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று இருந்தார். நீண்ட நாட்களாக திரும்பி வராத காரணத்தில் கரிஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருச்சி சென்று பார்த்துள்ளார். அப்போது  ராஜகோபால் சதீஷுக்கு சாம்பவி என்ற மனைவி இருந்ததாகவும், இதனால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்து வந்துள்ளார். இதையடுத்து ராஜகோபால் சதீஷ் உடனான தொடர்பை கரிஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) துண்டித்துள்ளார்.

இந்த நிலையில்  கடந்த 21.12.2022 தேதி பரத் என்பவருடன் கரிஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) வுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையேயான திருமண வாழ்க்கை 3 மாதங்கள் மட்டுமே நீடித்துள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனையடுத்து பெருங்குடியில் கரிஷ்மா தனது பெற்றோருடன் இருந்தபோது  கடந்த ஆண்டு மே மாதம்  செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் மீண்டும்  நட்பை தொடர வேண்டும் என ராஜகோபால் சதீஷ் கூறியுள்ளார். 

கர்பமாக்கி ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்

இதனையடுத்து மீண்டும் இரண்டு பேரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம்   கொடைக்கானல் அழைத்து சென்று  அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதன் விளைவாக கரிஷ்மா தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த விஷயம் தெரிந்த ராஜகோபால் சதீஷின் மனைவி சாம்பவி, நண்பர் சுரேகா ஆகியோர் தன்னை கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாகவும் அடையாறு காவல் துணை  ஆணையரை சந்தித்து கரிஷ்மா புகார் மனு கொடுத்துள்ளார். அதன் பேரில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

காணாமல் போன பாஜக தலைவர் சனா கான் கொலை செய்து ஆற்றில் வீச்சு.. கணவர் கைது..!

click me!