பட்டப்பகலில் இளம் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்ததால் அதிர்ச்சி ! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் !!

Published : May 13, 2019, 11:52 PM IST
பட்டப்பகலில் இளம் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்ததால் அதிர்ச்சி !  தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் !!

சுருக்கம்

நாகர்கோயில் வடசேரி பஸ் நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவரை இன்று உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வடசேரியில் பஸ் நிலையத்தையொட்டி பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இன்று பகல் 12 மணி அளவில் இந்த நிறுவனத்திற்கு வாலிபர் ஒருவர் சென்றார்.

அந்த வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவரின் அருகில் சென்றார். அந்த ஊழியரிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த பெண், வாலிபரை திட்டியபடி அவரை பிடிக்க நிறுவனத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

இதை கண்டதும் அந்த வாலிபர், வடசேரி பஸ் நிலைய பகுதிக்குள் ஓடினார். அந்த பெண்ணும் விடாமல் துரத்தினார். ஒரு வாலிபரை பெண் ஒருவர் துரத்தி செல்வதை கண்டதும் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கி பிடித்தனர்.
வாலிபர் பிடிபட்டதும், அந்த பெண்ணும் அங்கு வந்து விட்டார். அவர் அந்த வாலிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பயணிகளிடம் கூறினார். மேலும் அவர் பணம் தருவதாக கூறி தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறி அழுதார்.

பெண் கூறியதை கேட்டதும் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். பிடிபட்ட வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் இச்சம்பவம் பற்றி அவர்கள் வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்ததும், அவர்களிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..