மகளை தூக்குல தொங்கவிட்ட மருமகன்..! மருமகனை கச்சிதமா போட்டு தள்ளிய மாமா..!

Published : May 13, 2019, 04:55 PM ISTUpdated : May 13, 2019, 04:58 PM IST
மகளை தூக்குல தொங்கவிட்ட மருமகன்..!  மருமகனை கச்சிதமா போட்டு தள்ளிய மாமா..!

சுருக்கம்

மகளின் தற்கொலைக்கு காரணமான காதலனை கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

மகளை தூக்குல தொங்கவிட்ட மருமகன்..! 

மகளின் தற்கொலைக்கு காரணமான மருமகனை கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவர் விருதாச்சலம் அருகே உள்ள புதுக்குப்பம் என்ற பகுதியில் சில ஆண்டு காலமாக வசித்து வந்துள்ளார். குமரவேல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததால் அதே பகுதியில் வசித்து வந்த ஆனந்தவள்ளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் குமரவேலுக்கும் ஆனந்தவள்ளிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான ஆனந்தவள்ளி கடந்த ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனந்தவள்ளி மீது அவருடைய தந்தை ஏழுமலை மிகுந்த அன்பு கொண்டவர். தன்னுடைய ஒரே மகளை ஆசை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தவள்ளியின் தற்கொலைக்கு காரணமான குமரவேலை சும்மா விடக்கூடாது என எண்ணி என்றாவது ஒருநாள் போட்டு தள்ள வேண்டும் என திட்டமிட்டு இருந்துள்ளார் ஆட்டோ ஓட்டுநராக ஏழுமலை.

இந்நிலையில் குமரவேலுடன் நைசாக பழகி மது அருந்த வைத்துள்ளார் ஏழுமலை. மது போதை தலைக்கு ஏறியதும் குமரவேலின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவரது உடலை தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று செந்துறை என்ற பகுதியில் வீசி எறிந்து உள்ளார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார். 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..