கல்யாணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்த சம்பவம்... முதல் மனைவி இருப்பதை மறைத்து உல்லாசம்!!

Published : Jul 27, 2019, 04:56 PM IST
கல்யாணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்த சம்பவம்... முதல் மனைவி இருப்பதை மறைத்து உல்லாசம்!!

சுருக்கம்

ஏற்கனவே கல்யாணமான இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே கல்யாணமான இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கல்யாணம் செய்வதாக ஏமாற்றி இளம் பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருநகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகள் நித்யா. இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

அதில்; நான் கடந்த 2012-ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது எனக்கும், திருமங்கலம் அருகே தர்மத்துபட்டியில் உள்ள அக்கையா நகரைச் சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ்  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இது காதலாக மாறியது.

அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் என்னிடம் நெருங்கி பழகினார். இந்த நெருக்கத்தால் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தற்போது திருமணம் செய்ய மறுத்து வருகிறார். இது குறித்து கேட்டபோது, அவரும் அவரது தாய் லட்சுமியும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர் என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரித்ததில், சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் விக்னேஷ் அங்கு ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!