அண்ணியுடன் கள்ளக் காதல்... அண்ணனை அடித்தே கொன்ற தம்பி!

Published : Sep 04, 2018, 11:15 AM ISTUpdated : Sep 09, 2018, 08:28 PM IST
அண்ணியுடன் கள்ளக் காதல்...   அண்ணனை அடித்தே கொன்ற தம்பி!

சுருக்கம்

சென்னை திருமங்கலத்தில் அண்ணன் மனைவியுடனான கள்ளக் காதலால் அண்ணனை அடித்து கொன்ற தம்பியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை திருமங்கலத்தில் அண்ணன் மனைவியுடனான கள்ளக் காதலால் அண்ணனை அடித்து கொன்ற தம்பியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அண்ணாநகர்  திருமங்கலத்தை அடுத்த கலைவாணர் காலனி காந்தி தெருவை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் நேற்று முன் தினம் ரத்தம் காய்ந்த நிலையில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜெ ஜெ நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ரங்கநாதன் பின்மண்டையில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, ரங்கநாதன் குடும்ப உறுப்பினர்களிடையே காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில் அண்ணியுடன் இருந்த கள்ள காதலால் காரணமாக தன் அண்ணன் ரங்கநாதனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக அவரது தம்பி பாரதிராஜா ஒப்பு கொண்டார். 

இதனையடுத்து கொலையாளி பாரதிராஜாவை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!