தலையை துண்டித்து, உடல் பாகங்களை செதில் செதிலா வெட்டி வீசிய பயங்கரம்... நெல்லை மாநகரையே நடு நடுங்கவிட்ட சம்பவம்...

By sathish kFirst Published Aug 21, 2019, 5:57 PM IST
Highlights

கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஞாயிறன்று இரவில் கட்டிட்டத் தொழிலாளி ஒருவர் தலைத்துண்டிக்கப்பட்டுக் உடல் பாகங்களில் செதில் செதிலாக  வெட்டி  கொலை செய்யப்பட, நெல்லை மாநகரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஞாயிறன்று இரவில் கட்டிட்டத் தொழிலாளி ஒருவர் தலைத்துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட, நெல்லை மாநகரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றங்கரை கருப்பந்துறையை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு முத்துமாரியை கரம் பிடித்த இவருக்கு மூன்று மாத வயதில் கைக்குழந்தை உள்ளது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில், சரியாக 9.40க்கு தனது நண்பர்களான கணேசன் மற்றும் சரவணனுடன் அங்குள்ள ஆற்றுப்பாலம் அருகே பேசிக்கொண்டிருந்த பொழுது, அவ்வழியாக ஆட்டோவில் மற்றும் டூவீலரில் வந்த 6 பேர் திடீரென ஈவு இரக்கமே இல்லாமல் வெட்டித் தள்ளியுள்ளனர்.

வெட்டு வாங்கிய நிலையிலேயே மற்ற இருவரும் தப்பித்து ஒட, கால் துண்டாகி ஓட இயலாத மணிகண்டனை அனைவருமாக சேர்ந்து  செதில் செதிலாக வெட்டித் தள்ளியதோடு மட்டுமில்லாமல், அவருடைய தலையையும் துண்டித்து கொலை செய்துள்ளனர். மணிகண்டன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது சொந்தக்காரர்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கருப்பந்துறை - மேலநத்தத்தில் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட, கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்குள்ள மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் மறியலை கைவிட்டனர்.

இவ்வேளையில், கருப்பந்துறை - விளாகம் பகுதிக்கு செல்லும்  அனைத்து வாகனங்களையும் சோதனையிட்ட மாநகர போலீசார், டவுன் உதவிக் கமிஷனர் தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக  ஈடுப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க, விளாகம் பகுதியிலுள்ள குறிப்பிட்ட சமூகத்தினர் இப்பகுதியை கடக்கும் போது, மற்றொரு சமூகத்தை சேர்ந்த கொடூரமாக கொல்லப்பட்ட மணிகண்டன் ஜாதி பெயரைக் சொல்லி கேலி செய்திருப்பதாகவும், சாதித் தலைவருக்கு வைக்கப்பட்ட ப்ளக்ஸ் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் மணிகண்டன் குறிப்பிட்ட சமூகத்தினரை அடித்து உதைத்ததும்  இந்த அதிபயங்கர கொலைக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

click me!