நூறு ரூபாய்க்காக நண்பர் கல்லால் அடித்து கொலை - மதுபோதையில் வியாபாரி வெறிச்செயல் ..

Published : Aug 21, 2019, 04:40 PM ISTUpdated : Aug 21, 2019, 04:43 PM IST
நூறு ரூபாய்க்காக நண்பர் கல்லால் அடித்து கொலை - மதுபோதையில் வியாபாரி வெறிச்செயல் ..

சுருக்கம்

வியாபாரத்தில் தரவேண்டிய 100 ரூபாயை தனது நண்பர் தராததால் மதுபோதையில் அவரை கல்லால் அடித்து கொன்ற வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .  

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் . இவர் திருஷ்டி கழிக்க பயன்படும் கருடன் கிழங்கை விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் . இவரின் நண்பர் தனசேகர் . இவரும் அதே தொழிலை செய்து வந்தார் . 

இருவரும் ஒன்றாக சேர்ந்து கருடன் கிழங்கை எடுக்கச் செல்வார்கள் என கூறப்படுகிறது .அதனால் இருவரும் சேர்ந்து விற்பனை செய்து அதில் வரும் பணத்தை சமமாக பிரித்துக் கொண்டுள்ளனர். பின்னர் இரண்டு பெரும் சேர்ந்து மது அருந்துவர்களாம் .

சம்பவத்தன்றும் இருவரும்  சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள் .அப்போது ஏற்கனவே முருகேசன் தரவேண்டிய 100 ரூபாய் பணத்தை சேர்த்து தருமாறு தனசேகர் கேட்டிருக்கிறார் . அதற்கு முடியாது என்று முருகேசன் மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . ஒருகட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் . அப்போது தனசேகர் , அருகே கிடந்த கற்களைக் கொண்டு முருகேசனை தாக்க தொடங்கியிருக்கிறார் . அதில் பலமாக காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார் .

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் போதையில் இருந்த தனசேகரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் .
 

PREV
click me!

Recommended Stories

ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?