மயிலாடுதுறையில் பாமக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நபர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவேறு சமூகத்தினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவரது உறவினர் சரவணன் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது மர்மகும்பலால் அஜித் குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வெட்டு காயங்களுடன் சரவணன் உயிர்த்தப்பினார். படுகொலை செய்யப்பட்ட அஜித் குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன் கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியிட்ட 6 முறையும் தோல்வி; 7வது முறையாவது கைகொடுக்குமா தென்காசி? எதிர்பார்ப்பில் கிருஷ்ணசாமி
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உறவினர்கள் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மற்றொரு பிரிவு மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். இதன் காரணமாக இரு பிரிவினர் இடையே ஜாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
உலகப்புகழ்பெற்ற ஆழிதேர் திருவிழா; பக்தர்களின் வெள்ளத்தில் அழகுற ஆடி அசைந்து வரும் திருவாரூர் தேர்
மயிலாடுதுறையில் தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கடைகளை மூடச் சொல்லி பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டல் விடுத்ததால் கடைகள் அடைக்கப்பட்டு பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே தாங்கள் போராட்டங்களை கைவிட போவதாக கூறி வருகின்றனர்.