பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த உறவினரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 28 வயது பெண், கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் இருப்பதை கண்ட அவரது தந்தை அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ஆனந்தகுமார்(வயது 31) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
9 ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமியை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரிகள்
இது குறித்து அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் துறையினர் ஆனந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.