காதலியை சரமாரியாக குத்திக்கொன்ற இளைஞர்... பரபரப்பு வாக்குமூலம்!!

Published : Nov 29, 2018, 10:59 AM IST
காதலியை சரமாரியாக குத்திக்கொன்ற இளைஞர்... பரபரப்பு வாக்குமூலம்!!

சுருக்கம்

நெல்லை அருகே காதலியை சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கவரிங் நகை வாங்கி தந்ததால் பேச மறுத்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்றார் என்று தெரிவித்துள்ளார். 

நெல்லை அருகே காதலியை சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கவரிங் நகை வாங்கி தந்ததால் பேச மறுத்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்றார் என்று தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த தேவராஜ் மகள் மெர்சி (23) வேலை செய்து வந்தார். இவரும், அதே கடையில் வேலைசெய்த திருக்குறுங்குடி மகிழடியைச் சேர்ந்த சண்முகம் மகன் ரவீந்திரனும் (29) காதலித்து வந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரவீந்திரன் வேலையில் இருந்து நின்று விட்டார். 

இந்நிலையில் மெர்சி, ரவீந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவீந்திரன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மெர்சியை முக்கியமாக பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே ஒரு கடையின் மாடியில் இருவரும் சந்தித்து பேசினர்.  அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மெர்சியை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தப்பியோட முயன்ற ரவீந்திரனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவனிடம் விசாரணை நடத்தி போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் மெர்சி என்னிடம் தங்க நகை வாங்கி தரும் படி கேட்டார். ஆனால் என்னிடம்  பணம் இல்லாத காரணத்தால் கவரிங் நகை வாங்கி கொடுத்தேன். இதை அறிந்த மெர்சி என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மெர்சி கண் முன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளவே கத்தி வாங்கினேன்.

ஆனால் இருவரும் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் மெர்சியை சரமாரியாக குத்திவிட்டேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே மெர்சியை ரவீந்திரன் கத்தியால் சரமாரியாக குத்தும் கொடூர காட்சி அருகில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலானது. கடந்த சில மாதங்களாக பெண் காதலிக்க வில்லை என்றால் ஆண்கள் கொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்