ஃபேஸ்புக் காதலியை தனியாக வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற இளைஞன்... நெல்லையில் பரபரப்பு!

Published : Dec 21, 2018, 12:57 PM IST
ஃபேஸ்புக் காதலியை தனியாக வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற இளைஞன்...  நெல்லையில் பரபரப்பு!

சுருக்கம்

இளம் பெண்ணை காதலிப்பதாக சொல்லி  நேரில் வரவைத்தா காதலன் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லை அருகே பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கம்யூட்டர் சென்டர் ஒன்றில் பயின்று வருகிறார். அந்த இளம் பெண்ணுக்கு   மேலச்செவல் அருகே உள்ள வாணியங்குளத்தை சேர்ந்த ஜேசிபி ஆப்ரேட்டரான சுந்தர் ஃ பேஸ்புக் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் சுமார் 6 மாதமாக ஃபேஸ்புக் சாட் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் வாட்ஸ் ஆப்பில் காதலித்து வந்துள்ளான்.   

இந்நிலையில் நேற்று கம்யூட்டர் சென்டருக்கு சென்ற அந்த மாணவி இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் , அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நாங்குநேரி அருகே சின்னமூலக்கரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த விசாரணையில் கம்பியூட்டர் சென்டரில் காணாமல் பெண்தான் சடலமாக கிடக்கிறார் என போலீசார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த விசாரணையில், இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிய  சுந்தர் அவரை நேரில் வரவைத்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து மாறி மாறி கற்பழித்துள்ளார். இதை எங்கே வெளியே சொல்லி தன்னை சிக்கவைத்துவிடுவாளோ  என யோசித்த அவர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தமுள்ள சுந்தர் மற்றும் அவனது நண்பர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பிறகு வாட்சப் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டு  கற்பழித்து கொல்லப்பட்ட  சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!