உனக்கு ஜாமீன் கொடுக்கணுமா? பிரியாணிகாரனுடன் உல்லாச வாழ்க்கைக்காக குழந்தையை கொன்ற அபிராமிக்கு கோர்ட் அதிரடி...

By sathish kFirst Published Dec 20, 2018, 8:09 PM IST
Highlights

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் அபிராமிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை கிண்டியை அடுத்து  குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு  அதேபகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது  இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.

தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய்  கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி  பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரும் கணவருக்கு கட்டுப்படாத அபிராமி  இரு குழந்தைகளையும் வீட்டில் தவிக்க விட்டு காதலன் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று இருந்து கொண்டதாகவும் அவரை கெஞ்சி கூத்தாடி கணவர் விஜய் வீட்டுக்கு அழைத்து  வந்துள்ளார்.

கணவரின் டார்ச்சரால் தனது கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கை பாதித்ததால் குழப்பத்தில் இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன்  தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்ட அபிராமி டீ யில் விஷத்தைக் கலந்து கொடு தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பித்து  சென்றார்.

இதனையடுத்து, அபிராமியின் காதலனான சுந்தரத்தை  கைது  செய்து விசாரணையில் கொடியுத்த தகவலின் அடிப்படையில், திட்டமிட்டபடி தப்பி ஓடிய அபிராமியை  செல்போன் சிக்னலை வைத்து தேடியதில்  நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த அபிராமியை, பேருந்து நிலையத்தில் பிடிபட்டார். கைது செய்த போலீசார்  தீவிர விசாரணைக்குப் பின்  வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், சிறையில் உள்ள  அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அபிராமி மீதான கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நாளை முதல் விசாரணை தொடங்க உள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காஞ்சிபுரம் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ளட்டும் என கூறி, அபிராமியின் கீழ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

click me!