வேலூர் அருகே பயங்கரம்... இளம்பெண் அடித்து கொலை!

Published : Dec 20, 2018, 10:09 AM IST
வேலூர் அருகே பயங்கரம்... இளம்பெண் அடித்து கொலை!

சுருக்கம்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே விறகு எடுக்க சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே விறகு எடுக்க சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை கிராமம், அக்ரகாரமலை அமைந்துள்ளது. இந்த கிராமத்து பெண்கள், அக்ரகாரமலை பகுதிக்கு சென்று, விரகுகளை கொண்டு வந்து சமையலுக்கு பயன்படுத்துவர். மேலும் சிலர், அதனை விற்பனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று காலை கண்ணாம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் விரகுகளை எடுக்க  சென்றனர். அப்போது, அங்கு ஒரு இளம்பெண், உடல் முழுவதும் பலத்த காயத்துடன் ரத் வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து நாட்றாம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியை சேர்ந்த வளர்மதி என தெரிந்தது. மேலும் விசாரணையில், நேற்று அதிகாலையில் அக்ரகாரமலை பகுதிக்கு விறகு  எடுக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால், அவர் காட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை யார் கொலை செய்தது, எதற்காக செய்தனர் என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!