நீ எனக்கு மட்டும் தான்.!! கல்லூரி பேராசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த காமவெறி இளைஞன்!!

Published : Feb 10, 2020, 09:13 PM ISTUpdated : Feb 10, 2020, 09:35 PM IST
நீ எனக்கு மட்டும் தான்.!!  கல்லூரி பேராசிரியை மீது பெட்ரோல்  ஊற்றி எரித்து கொலை செய்த காமவெறி   இளைஞன்!!

சுருக்கம்

பொதுமக்கள் கல்லூரி பேராசிரியையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் முழுவதும் தீ;ப்பற்றி எரிந்ததால் அங்கிதாவை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவளது பச்சிளம் குழந்தை தாய் பாலுக்கும் பாசத்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் காண்போரை கண்கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

BY ; T.Balamurukan
மகாராஷ்டரா மாநிலத்தில் கல்லூரி பேராசிரியை மீது  கதற கதற இளைஞன் ஒருவன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. 


மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் இயங்கி வரும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் தான் அங்கிதா பிகட் .இவருக்கு வயது 24. கல்லூரிக்கு எப்போதும் பஸ்சில் பயணம் செய்து ஹிங்கனா காட் பகுதியில் இறங்கி சிறிது தூராம் நடந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இதை ரெம்ப நாட்களாகவே பார்த்து கொண்டு இருந்த இளைஞர் விக்கி நக்ரால் என்பவருக்கு அந்த கல்லூரி பேராசிரியை மீது காதல் வந்திருக்கிறது. தன்னுடைய காதலை ஒரு காதலனாக பேராசிரியையிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பேராசிரியை தனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இனிமேல் இதுபோன்று என் பின்னால் வருவதை நிருத்திக்கொள் என்று சொல்லி எச்சரிக்கை செய்திருக்கிறார்.


ஆனாலும் விக்கி நக்ரால் அந்த பேராசிரியரை விடுவதாக இல்லை . அவனுடைய நோக்கம் எல்லாம் எப்படியும் அவளை அடைந்தே தீருவது; என்று குறிக்கோளாக இருந்திருக்கிறான். அந்த பேராசிரியை இவனின் இச்சைக்கு சம்மதிக்கவில்லை. தான் ஒரு 'பத்னி' என்பதை நிருபித்திருக்கிறாள் . 
என்னை நிம்மதியாக வாழ விடு: உனக்கும் திருமணமாகி விட்டது. உன் பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோசமாக வாழ்க்கையை நடத்து என்று பேராசிரியை சொல்லியும் அவன் கேட்கவில்லை. இவளை அடைந்தே தீருவது: இல்லையென்றால் இவளை எவனும் அனுபவிக்க கூடாது என்று திட்டமிட்ட விக்கி  அந்த பேராசிரியை கல்லூரிக்கு செல்ல  நடந்து போகும் போது மீண்டும் வந்து தன்னுடைய காதலை சொல்ல அவளோ நோ சொல்ல கையில் வைத்திருந்த பெட்ரோலை அவள் மீது ஊற்றி பற்றவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இந்த சம்பவம் புனே நகரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


உடனே அங்கிருந்த பொதுமக்கள் கல்லூரி பேராசிரியையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் முழுவதும் தீ;ப்பற்றி எரிந்ததால் அங்கிதாவை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவளது பச்சிளம் குழந்தை தாய் பாலுக்கும் பாசத்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் காண்போரை கண்கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி