
வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று 17 வயது சிறுமியை ஒரு வருடத்துக்கும் மேலாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட 18 பேரில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக நடித்து கர்பமாக்கிவிட்ட கைவிடுவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிப்பது, திருமணம் செய்துகொண்டு பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது என பல வகைகளில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. இந்த வரிசையில் வேலை வாங்கி தருவதாக 11 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று பலர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார், வயிற்றுவலி இருப்பதாக மருத்துவர்கள் கூற, மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. திருமணமாகாத 17 வயது சிறுமி கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் சிறுமியை விசாரித்தனர். சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது, அப்போது அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையாக கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அம்மாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும், தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே குடும்பத்தை விட்டு பிறிந்து சென்று விட்டதாகவும், இதனால் குடும்பம் வறுமையில் சிக்கியதாகவும், எனவே குடும்பத்தை பாதுகாக்க நினைத்து தான் வேலைக்கு செல்ல முயன்றதாகவும் கூறினார். இந்நிலையில் தனது குடும்பச் சூழலை கூறி சிலரிடம் வேலை கேட்டுள்ளார், சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய சிலர் அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்தனர், கடந்த ஓராண்டுக்கு மேலாக தான் இதுபோன்ற சித்திரவதையை அனுபவித்து வந்ததாக கூறினார். இதுவரை 15க்கும் மேற்பட்டோர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அவர் கூறினார். இதனார் சிறுமி கர்ப்பமானார்.
அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அவர் மருத்துமனைக்கு வந்ததாகவும், அதிகாரிகளிடம் அவர் கூறினார். இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் புகார் கூறினர். வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதுவரையில் 15 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவருடன் மேலும் சில செக்ஸ் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.