கொலையாளி டைரியில் 34 பேர்! பட்டியலில் இருக்கும் வி.சி.க ரவிகுமார்... அதிரவைக்கும் பின்னணி

Published : Sep 04, 2018, 04:14 PM ISTUpdated : Sep 09, 2018, 07:55 PM IST
கொலையாளி  டைரியில் 34  பேர்! பட்டியலில் இருக்கும் வி.சி.க ரவிகுமார்... அதிரவைக்கும் பின்னணி

சுருக்கம்

பொதுவாக பத்திரிக்கையாளர்கள் என்று வரும் போது எந்த விதமான பாகுபாடும் இன்றி நாட்டில் நடக்கும் அநீதிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது கடைமை ஆகி விடுகிறது. 

பொதுவாக பத்திரிக்கையாளர்கள் என்று வரும் போது எந்த விதமான பாகுபாடும் இன்றி நாட்டில் நடக்கும் அநீதிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது கடைமை ஆகி விடுகிறது. அந்த கடமையை சரிவர செய்வது அவ்வளவு எளிதல்ல. பல்வேறு தடைகளையும், அச்சுறுத்தல்களையும் மீறி தான் ஒவ்வொரு முக்கிய செய்தியுமே வெளிவருகிறது. 

அந்த வகையில் யாருக்கும் பயப்படாமல் துணிகரமாக செயலாற்றிய சில பத்திரிக்கையாளர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். கௌரி லங்கேஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் அனைவரும் அறிந்ததே. எந்த வித தனிப்பட்ட விரோதத்தினாலும் இவர்களின் கொலை நடைபெறவில்லை. இந்த பத்திரிக்கையாளர்கள் அனைவருமே திட்டமிட்டு தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். 

கெளரி லங்கேஷ் வழக்கை துப்பு துலக்கிய போது கைது செய்யப்பட்ட அமோல் காலே தான் இந்த வழக்கில் இப்போது முக்கிய சாட்சி. கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் இவர் கைது செய்யப்பட்ட போது நடந்த விசாரணையின் போது தான் இவர்களின் குறி கெளரி லங்கேஷை மட்டுமல்ல என்று தெரியவந்திருக்கிறது.
 இந்த வழக்கில் பிடிபட்டிருக்கும் அமோல் காலேவிடம் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டிருக்கிறது. 

இந்த டைரியில் 34 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதுவும் சங்கேத மொழியில். இதனை அறிந்து கொண்ட போலீசார் அது கூறித்து விசாரித்த போது அந்த பெயர் பட்டியலில் இருப்பவர்கள் யார்? யார்? என்ன விவரம் தெரியவந்திருக்கிறது. அவர்கள் கொலை செய்ய திட்டமிட்டிருந்த அந்த பட்டியலில் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாரின் பெயர் தான் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்திருக்கிறது. புரட்சிகரமான சிந்தனை கொண்டவரும், சாதிமறுப்பு கொள்கைகளை உடையவருமான இவரின் கருத்துக்களும், ஏற்கனவே கொலை செய்யப்பட்டிருக்கும் பத்திரிக்கையாளர்களை போல முற்போக்கானவை தான். இதனாலேயோ என்னவோ ரவிகுமாரின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த ஆபத்தை கூறித்து தமிழக அரசிடம் தெரிவித்திருக்கின்றது கர்நாடக சிறப்பு புலனாய்வுப்படை. இன்னும் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில் ரவிக்குமாரின் பாதுகாப்புக்கு ஆவண செய்ய வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் , தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். 

மேலும் ரவிக்குமார் புதுச்சேரியில் வசிப்பதால், புதுச்சேரி முதல்வரிடமும் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வேண்டி மனு அளிக்கப்பட்டிருக்கிறது. தொடரும் இந்த கொலைகள் ஏற்கனவே வெளியான ரகசியங்களுக்காக நடக்கும் பழிவாங்கலா? அல்லது ஏதேனும் முக்கியமான ரகசியங்கள் வெளிவந்துவிடாமல் தடை செய்யும் முயற்சியா? இதை செய்வது யார்? என பல விடைதெரியாத கேள்விகளுடன் மேலும் விசாரணையை தொடந்து கொண்டிருக்கின்றது கர்நாடக புலனாய்வுத்துறை.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்