அண்ணன் இல்லாத நேரத்தில் அண்ணியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்... மைத்துனரின் பகீர் வாக்குமூலம்!

By sathish k  |  First Published Sep 4, 2018, 1:16 PM IST

தனது அண்ணியுடன் நெருங்கிப் பழகியதால் ஆத்திரமடைந்த மைத்துனர், தூங்கும்போது இரும்பு ராடல் அடித்தே கொன்ற சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரையை சேர்ந்தவர் ரங்கநாதன் தாம்பரத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  தற்போது சென்னை பாடி புதுநகர் ஜெ.ஜெ.நகர்  அப்பார்ட்மென்டில் நண்பர்கள் மூன்று பேருடன் தங்கி இருந்தார். இவர் நேற்று காலை ரங்கநாதன் வெகு நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டில் அருகில் வசிப்போர் ரங்கநாதன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது, ரங்கநாதன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.  தகவலறிந்து வந்த போலீசார் ரங்கநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ரங்கநாதனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், ரங்கநாதனை பலமான ஆயுதத்தால் தாக்கியதில் அதிகளவில் ரத்த வெளியேறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் உயிரிழந்த ரங்கநாதனுடன் தங்கி இருந்த நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் அப்போது, ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்று விட்டார். ராஜேஷ் வேலைக்கு  சென்ற தெரியவந்தது. ரங்கநாதனுடன் சம்பவத்தன்று பாரதி ராஜா மட்டும் உடன் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் பாரதிராஜாவிடம் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் "நான் தான் இரும்பு ராடால் அடித்து கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பாரதி ராஜாவை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாரதி ராஜா அளித்த வாக்கு மூலம் குறித்து போலீசார் கூறியதாவது; சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் திருநல்லிஈஸ்வர் நகரில் பாரதிராஜா தனது அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். அவரது அண்ணன் ஜிபி சாலையில் வாகன உதிரிபாகம் கடை நடத்தி வருகிறார். பாரதிராஜா அண்ணனுக்கு உதவியாக கடையில் உள்ளார். அண்ணனுக்கு திருமணம் ஆன பிறகு பாரதிராஜா நண்பர் ரங்கநாதன் உடன்  அப்பார்ட்மென்டில்  வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் பாரதி ராஜா தனது நண்பர் ரங்கநாதனை அண்ணன் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம்.

இதனால் ரங்கநாதனுக்கு பாரதிராஜா குடும்பத்துடன் நன்றாக பழகி வந்துள்ளார். அப்போது பாரதிராஜாவின் அண்ணியுடன் ரங்கநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடையில் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாரதி ராஜா மற்றும் அவரது அண்ணன் கடைக்கு சென்ற உடன், ரங்கநாதன் பாரதி ராஜாவின் அண்ணன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் பாரதி ராஜாவுக்கு தெரியவந்தது. அதை பற்றி ரங்கநாதனிடம், "வீட்டில் நாங்கள் இல்லாத நேரத்தில் என் அண்ணியை சந்தித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனது அண்ணனுக்கு தெரியவந்தால் எங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அதற்கு ரங்கநாதன்,  உங்க அண்ணி தான் என்னை வரசொன்னங்க. உன்னால முடியில.... என்னால முடியிது உன் வேலையை  பாருங்க  என கூறியுள்ளார். இதுபோல 2  மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி சண்ட வந்துள்ளது.  இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு ரங்கநாதன் பாரதிராஜாவின் அண்ணன் வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்து பாரதிராஜா நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு மது அருந்திவிட்டு அறைக்கு வந்துள்ளார் அப்போது ரங்கநாதன் அசதியில் தூங்கி கொண்டிருந்தார். 

இதை பார்த்த பாரதிராஜா உடற் பயிற்சி செய்யும் இரும்பு ராடால் ரங்கநாதனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரங்கநாதன் உயிரிழந்தார். உடனே பாரதிராஜா போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரங்கநாதன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு இறந்தது போல, ஏற்பாடுகள் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டுள்ளதாக வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

click me!