பாதிக்கப்பட்ட பெண்கள் 044-28592750 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்!! களமிறங்கிய தேசிய மகளிர் ஆணையம்

By sathish kFirst Published Mar 14, 2019, 12:31 PM IST
Highlights

பொள்ளாச்சி விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தியிருக்கிறார்.
 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை தேடிப்பிடித்தும், முகநூலில் அறிமுகமாகியும் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது. 

இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக 20 பேர் கொண்ட நெட்வொர்க் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது, திரும்பாத திரும்ப உல்லாசமாக இருக்க அழைப்பது  தொடர்ந்து வந்துள்ளனர். 

இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் தமிழகமெங்கும் பல்வேறு  இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தியிருக்கிறார்.  

இதுகுறித்து,  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அளித்த  அறிக்கை அடிப்படையில் நேற்று விசாரணை நடத்தியதில் காவல் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. பெண்கள் அவர்களது குறைகளைச் சொன்னால் நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடமும் விசாரணை நடத்துவோம் எனக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் புக்கர் தெரிவிக்க விரும்பினால்  044-28592750 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றார். 
 

click me!