அவங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம்... ஐடியா கொடுத்த தயாரிப்பாளர் மனைவி!!

By sathish kFirst Published Mar 14, 2019, 11:51 AM IST
Highlights

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா கருத்து தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மேற்கில் நடந்த அதிபயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 200 பெண்களின் வாழ்க்கையை சீரழித்து ஆபாச படம் பிடித்து, திரும்பாத திரும்ப அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது.  

தமிழகத்தை உலுக்கிய இந்த க்ரைமில் தொடர்புள்ள 20 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்றும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பலரும் பரிந்துரை செய்து வருகிறார்கள். விஜய் நடித்த தெறி படத்தில் கொடுத்த தண்டனை அளிக்க  கொடூரமாக இருக்கவேண்டும் என  சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா  ட்வீட் போட்டுள்ளார்.

"Forget death penalty for rapists! Instead how about government punish them,with surgical castration, and blinding them permanently, with the combination of solitary confinement until the rapist go buttcheeks crazy,exacerbating,existing psychiatric condition"

Forget death penalty for rapists! Instead how about government punish them,with surgical castration, and blinding them permanently, with the combination of solitary confinement until the rapist go buttcheeks crazy,exacerbating,existing psychiatric condition⁉️🤷🏻‍♀️

— neha nehu:) (@NehaGnanavel)

"பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது. அவர்களின் ஆண்மையை நீக்கி, கண்ணை குருடாக்கி, ஆளில்லா தனி அறையில் அடைத்துவைத்து அவர்களின் மனநிலைமையே மோசமடைய செய்தால் எப்படி இருக்கும்" என்று ட்வீட்  போட்டுருக்கிறார் நேஹா. 

click me!