காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்..!

Published : Nov 08, 2019, 12:09 PM ISTUpdated : Nov 08, 2019, 12:12 PM IST
காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்..!

சுருக்கம்

அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் இருக்கிறது ஏர்வாடி நகரம். இங்கிருக்கும் தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு வருகிறவர்களுக்கு விரைவில் மனநலம் சரியாகுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்குவது வழக்கம்.

இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மனநலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பானுவை அவரது தந்தை ஏர்வாடி தர்காவிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் வெளியே பானு வந்திருக்கிறார். 

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பானுவை மீட்ட அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தரப்பில் இருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தப்பியோடிய 7 சிறுவர்களையும் காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குட்டியின் யானையின் காலில் பழுத்திருக்கும் கட்டி..! வலியால் வனப்பகுதிக்குள் செல்லமுடியால் தவிப்பு..!

PREV
click me!

Recommended Stories

புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்