பட்டப்பகலில் பயங்கரம்..! இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர வாலிபர்..!

Published : Feb 21, 2020, 03:37 PM ISTUpdated : Feb 21, 2020, 03:52 PM IST
பட்டப்பகலில் பயங்கரம்..! இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர வாலிபர்..!

சுருக்கம்

கடலூர் அருகே இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜான் விக்டர். இவரது மனைவி பிலோமினா(வயது 24). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜான் விக்டர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். வடலூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பிலோமினா வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலைக்கு தனியார் பேருந்து ஒன்றில் பிலோமினா சென்று வந்துள்ளார். அப்பேருந்தின் ஓட்டுநராக சுந்தரமூர்த்தி என்னும் வாலிபர் பணியாற்றுகிறார்.

பேருந்தில் செல்லும் போது பிலோமினாவிற்கும் ஓட்டுனருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிலோமினா நன்றாக பேசுவதை தவறாக எடுத்துக்கொண்ட சுந்தரமூர்த்தி அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் திருமணமாகி இருகுழந்தைகளுக்கு தாயான பிலோமினா, அவரது காதலை ஏற்க மறுத்ததுடன் சுந்தரமூர்த்தியுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். இந்தநிலையில் இன்று காலையில் வேலைக்கு சென்ற பிலோமினாவை மறித்து தன்னை காதலிக்குமாறு சுந்தரமூர்த்தி வற்புறுத்தி இருக்கிறார்.

அதை பிலோமினா மறுக்கவே ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பிலோமினா மீது ஊற்றி தீ வைத்தார். இதில் பிலோமினா உடல் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிலோமினாவின் உடலில் தீக்காயம் ஏற்படவே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சுந்தரமூர்த்தியை பிடித்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர்.

சுந்தரமூர்த்தி மீது கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பட்டப்பகலில் இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..! அறந்தாங்கியில் பரபரப்பு..!

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை