வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக பலாத்காரம்... வெறி தீராததால் இறுதியில் நேர்ந்த பரிதாபம்..!

Published : Nov 12, 2020, 05:27 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக பலாத்காரம்... வெறி தீராததால் இறுதியில் நேர்ந்த பரிதாபம்..!

சுருக்கம்

விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி(45) இவரது ஒரே மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். சாந்தி தற்போது ஆலடி ரோட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டின் ஒரு கதவு லேசாக திறந்து இருந்தது. வாசலில் கோலமும் போடவில்லை. இதனால், சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் பெண் சென்று பார்த்தபோது சாந்தி கழுத்து அறுக்கப்பட்டு வயிற்றில் கத்திக்குத்து  காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். 

உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாந்தியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சாந்தியின் சேலை, ஜாக்கெட் கிழிந்த நிலையில் இருந்ததால் அவரை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு