இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கணவரே அடித்துக் கொன்றது அம்பலம்..!

Published : May 01, 2019, 09:56 AM IST
இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கணவரே அடித்துக் கொன்றது அம்பலம்..!

சுருக்கம்

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கணவரே அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கணவரே அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்திபன் (வயது 27). தொழிலாளி. இவருக்கும், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியா (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிவப்பிரியா கடந்த மாதம் திடீரென வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டார். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கணவரை கைது விசாரணை நடத்தினர். 

அவர் போலீசார் அளித்த வாக்குமூலத்தில் கணவர் பார்த்திபன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, சிவப்பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினேன் என்றார். மேலும், சிவப்பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, இந்த கொலைக்கு பார்த்திபனின் தாய் கவுரி (50), சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்