கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்... மருமகள் வெறிச்செயல்!!

Published : May 09, 2019, 11:30 AM IST
கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்...  மருமகள் வெறிச்செயல்!!

சுருக்கம்

கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம் அடைந்த மருமகள் மாமனாரை உயிரோடு எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம் அடைந்த மருமகள் மாமனாரை உயிரோடு எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நெமிலிகாலனி ராஜாத்தி தெருவை சேர்ந்தவர் சபாபதி மகன் பிரபாகரன்க்கும், சென்னை மாதவரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் காயத்திரிக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களுக்குமுன்பு பிரபாகரன் விபத்துக்குள்ளானதால் காயத்திரி கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில், பிரபாகரனுக்கு அவரது தந்தை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைத்தார். இந்த தகவல் அறிந்த காயத்திரி தன் தாய் கலைவாணியுடன் நெமிலிக்கு வந்து அங்கேயே குடிசை அமைத்து தங்கினார். பின்னர் கணவர் மற்றும் மாமனாருடன் சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமை வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் சபாபதி தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மீது தீப்பிடித்து எரிந்தது. தீயில் கருகிய சபாபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பின் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போலீசார் மற்றும் நீதிபதியிடம் அளித்த சபாபதி தனது வாக்குமூலத்தில், கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தபோது மருமகள் காயத்திரியும், அவரது தாயார் கலைவாணியும் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள் என தெரிவித்தார். பின்னர் அவர் இறந்து விட்டார். வழக்குபதிவு செய்து காயத்திரி மற்றும் அவரது தாயார் கலைவாணி ஆகியோரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்