
ஹைதராபாத்தில் தையல் தொழிலாளியான கணவர் தனது விருப்பப்படி ரவிக்கை தைக்காததால் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முப்பத்தைந்து வயதான விஜயலட்சுமி, தனது கணவர் தனக்கு தைத்த ரவிக்கை தொடர்பாக தகராறு செய்ததால், அவரது படுக்கையறையில் இறந்து கிடந்தார். ஹைதராபாத்தில் உள்ள அம்பர்பேட் பகுதியில் உள்ள கோல்நக திருமலா நகரில் கணவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பள்ளி செல்லும் இரு குழந்தைகளுடன் விஜயலட்சுமி வசித்து வந்தார்.
ஸ்ரீநிவாஸ் வீடு வீடாகச் சென்று புடவைகள் மற்றும் ரவிக்கைப் பொருட்களை விற்றும், வீடுகளில் துணிகளைத் தையல் செய்தும் வாழ்வாதாரம் செய்து வருகிறார். அவர் நேற்று விஜயலட்சுமிக்கு ரவிக்கை தைத்து கொடுத்ததாகவும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை என்றும், இது தொடர்பாக தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஜயலட்சுமி ரவிக்கையை மாற்றியமைக்க விரும்பினார், ஆனால் கணவர் அதை மறுத்துவிட்டார். இதனால் விஜயலட்சுமி மனமுடைந்தார். பின்னர், குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, படுக்கையறை கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டனர்.
பின்னர், குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, படுக்கையறை கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். ஸ்ரீநிவாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் பதில் வராததால், ஸ்ரீநிவாஸ் வலுக்கட்டாயமாக கதவைத் திறந்தார். அதற்குள் விஜயலட்சுமி இறந்து விட்டார்
.
அம்பர்பேட்டை இன்ஸ்பெக்டர் பி.சுதாகர் கூறுகையில், ’’கடந்த காலங்களில் கூட தனது மனைவி மனமுடைந்தபோது தன்னைப் பூட்டிக் கொண்டதாகவும், அதனால் அவர் எதிலும் சந்தேகம் கொள்ளாமல், அவரை தனியாக விட்டுவிட்டு குளிப்பதாகவும் நினைத்ததாக கணவர் கூறியதாக தெரிவித்தார்.
36 வயதுடைய பெண் தற்கொலைக் கடிதம் எழுதாததால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.