பெண் போலீஸ்க்கு லஞ்சம் கொடுக்க மறுத்தவருக்கு பளார் பளார்; மனித உரிமை ஆணையம் அந்த போலீஸ் மீது நடவடிக்கை.!!

By Thiraviaraj RMFirst Published Mar 6, 2020, 9:18 PM IST
Highlights

கோவையில் காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரை லஞ்சம் கேட்டு பெண் தலைமைக் காவலர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

T.Balamurukan

கோவையில் காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரை லஞ்சம் கேட்டு பெண் தலைமைக் காவலர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர் கிருஷ்ணவேணி. இவர் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் வழக்கு பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதுமாக இருந்திருக்கிறார்.இந்நிலையில் புகார் அளிக்க வந்த இளைஞர் ஒருவர் புகார் அளிக்க வந்த போது லஞ்சம் அளிக்க மறுத்துள்ளார். இதனால் பெண் ஏட்டு கிருஷ்ணவேணி, அவரின் சட்டையப் பிடித்து பளார் பளார் என கன்னத்தில் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

 இச்சம்பவம், தொடர்பாக இளைஞரைத் தாக்கிய பெண் ஏட்டு கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. அந்தச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்த இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு பெண் தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி தாக்குதல் நடத்தியது குறித்து கோவை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

click me!