ஒருமாத பெண் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்த கொலைகாரி..!! தமிழகத்தை தலைகுனிய வைத்த தம்பதி...!!

Published : Mar 06, 2020, 01:57 PM ISTUpdated : Mar 06, 2020, 01:58 PM IST
ஒருமாத பெண் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்த கொலைகாரி..!!   தமிழகத்தை தலைகுனிய வைத்த தம்பதி...!!

சுருக்கம்

பெண் குழந்தையின் பெற்றோர் வைரமுருகன், சௌமியா, வைரமுருகனின் தந்தை  சிங்கத்தேவர் என்ற மூவரை கைது செய்து விசாரணை நடத்தியதில்  31 நாள் ஆன பெண் சிசுவை பெற்றோர்களே  கொலை செய்துள்ளது  தெரியவந்துள்ளது.    

உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் ஒரு பெண் சிசு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அந்த வழக்கில் குழந்தையின்  பெற்றோர் உள்பட 3 பேரை கைது செய்தம்,  புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்தும் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த 
வைரமுருகன்-சௌமியா தம்பதி. இவர்களுக்கு  ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று  உள்ள நிலையில் கடந்த (31.01.2020) ஆம் தேதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த பெண் குழந்தை கடந்த மார்ச் 2ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறி பெற்றோர் குழந்தையை வீட்டின் முன்பு புதைத்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்த நிலையில் வி.ஏ.ஒ. மந்தகாளை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செக்காணூரணி காவல்துறையினர் பெண் குழந்தையின் பெற்றோர் வைரமுருகன், சௌமியா, வைரமுருகனின் தந்தை  சிங்கத்தேவர் என்ற மூவரை கைது செய்து விசாரணை நடத்தியதில்  31 நாள் ஆன பெண் சிசுவை பெற்றோர்களே  கொலை செய்துள்ளது  தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர்  புதைக்கப்பட்ட பெண்சிசுவை தோண்டி எடுத்து உடற்கூறு  பரிசோதனை நடத்தினர். இதில் இந்த குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது, 1980 கால கட்டத்தில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்த கொலை செய்தது குறிப்பிடத்தக்கது, தற்போது அதே பாணியில் பெண் சிசு கொலை அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்