லைலாவின் கணவர் வீட்டில் இல்லாத போது அவர் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதும் அவர் தூங்கும் அழகை ரசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று அந்த பெண் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சைக்கோ இன்ஜினியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் (28). டிப்ளமோ என்ஜினீயர். இவருக்கு தந்தை இல்லாததால் தாயாருடன் வசித்து வருகிறார். இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கமலதாஸ். இவரது மனைவி லைலா( 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் கமலதாசும், அவரது மனைவி மட்டுமே இருந்து வந்தனர்.
இதையும் படிங்க;- அம்மா லிஃப்ட் கொடுக்கிற சொல்லிட்டு.. காட்டுப்பகுதியில் வைத்து என்னை நாசம் பண்ணிட்டான்.. கதறிய சிறுமி.!
கடந்த சில நாட்களுக்கு முன் லைலா தலையில் காயங்களுடன் சுயநினைவு இன்றி மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்தத கணவர் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்ததார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அக்கத்து வீட்டை சேர்ந்த எட்வின்(30) என்பவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்;- லைலாவின் கணவர் வீட்டில் இல்லாத போது அவர் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதும் அவர் தூங்கும் அழகை ரசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று அந்த பெண் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த எட்வின் பலாத்காரம் செய்ய முயன்ற போது அலறி கூச்சலிட்டதால் இரும்பு கம்பியால் தலையில் தாக்கிவிட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்து தப்பிவிட்டார்.. இதனையடுத்து, போலீசார் எட்வினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.