பெண் கொடூரக்கொலை... உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கொலை செய்தோம்... கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

Published : Nov 14, 2018, 05:57 PM ISTUpdated : Nov 14, 2018, 05:58 PM IST
பெண் கொடூரக்கொலை... உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கொலை செய்தோம்... கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

சுருக்கம்

தாராபுரம் அருகே பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கொலை செய்ததோம் என குற்றவாளிகள் கூறியுள்ளனர்.

தாராபுரம் அருகே பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கொலை செய்ததோம் என குற்றவாளிகள் கூறியுள்ளனர். 

தாராபுரம் நஞ்சியாம் பாளையத்தில் உள்ள உப்பாற்றுபாலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்று துர்நாற்றம் வீசுவதையும், சாக்குமூடையின் குடும்பி பகுதியில் மனித தலை தெரிவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்தில் தாலி, கையில் மோதிரம் ஆகியவை இருந்தது. குடும்ப பிரச்னை, தகாத உறவு அல்லது முன்பகை காரணமாக பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் தாலியில் பி.ஜே. என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இதுகுறித்து விசாரித்தபோது கடை உரிமையாளர் இந்த தாலி இங்கு செய்யப்பட்டது தான் என்று கூறினார்.

இதனையடுத்து அனைத்து காவல் நிலையத்துக்கும் மாயமான பெண்கள் விவரத்தை கேட்டறிந்தனர். முருகன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (வயது 45) மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான முத்துலட்சுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இந்நிலையில் கொலை தொடர்பாக முத்துலட்சுமியின் தங்கை கணவர் வேலுச்சாமி (45) மற்றும் அவரது அக்காள் மகன் குமரேசன் (21) ஆகியோர் நேற்று சரணடைந்தனர். முத்துலட்சுமியை கொலை செய்ததை வேலுச்சாமி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக போலீசார் கைதானர்வர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் நான் குடும்பத்துடன் கவுந்தப்பாடியில் வசித்து வருகிறேன். எங்களுடன் எனது மனைவியின் அக்காள் முத்துலட்சுமி அவரது கணவர் முருகனுடன் வசித்து வந்தனர். 

எனக்கும் மனைவியின் அக்காளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி யை உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் உல்லாசத்துக்கு வரமுடியாது என்று மறுத்தார். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. எனது அக்காள் மகன் குமரேசன் உதவியுடன் முத்துலட்சுமியை கடத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கொலை செய்து சாக்கில் உடலை கட்டி தாராபுரம் உப்பாற்று பாலத்தில் வீசினோம் என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!