மஞ்சள் கயிற்றின் ஈரம் காய்வதற்குள் வெடித்த சண்டை; காதல் மனைவியை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை

By Velmurugan s  |  First Published Aug 8, 2024, 8:01 PM IST

கர்நாடகா மாநிலத்தில் திருமணமான சில மணி நேரங்களில் காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கர்நாடகா மாநிலம் கோளார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் (வயது 27), அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர் லகிதா ஸ்ரீ(18). இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல்வேறு நிலைகளைக் கடந்து இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி புதன் கிழமை காலை நேரத்தில் இருவருக்கும் உறவினர்கள் புடைசூழ கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து புதுமணத்தம்பதியர் இருவரும் தங்கள் நண்பர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு ஓய்வு எடுப்பதற்காக பகல் நேரத்தில் வீட்டில் இருந்த அறைக்குள் சென்றுள்ளனர். இருவரும் அறைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நவீன் அருகில் இருந்த கத்தியால் லகிதாவை கொடூரமாக தாக்கிவிட்டு தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டார்.

Tap to resize

Latest Videos

undefined

அடக்கடவுளே; பள்ளியில் நண்பர்களுடன் ஆசையாக விளையாடிய சிறுவனுக்கு இப்படி ஒரு முடிவா? மாணவர்கள் ஷாக்

சிறிது நேரத்தில் சண்டை ஓய்ந்து மயான அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது லகிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த நவீன் உயர் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரும் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இனி நம்மை சேர்ந்து வாழவிடமாட்டார்கள்; திருச்சி அருகே கள்ளக்காதலர்கள் விபரீத முடிவு

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்த சில மணி நேரத்தில் தம்பதி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!