நைட்டானாவே போதையில் வந்து ஒரே டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் கணவனை போட்டு தள்ளிய மனைவி..!

By vinoth kumar  |  First Published Feb 4, 2023, 11:01 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஓழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(45). தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியை கலைச்செல்வி(38). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 


எந்நேரமும் குடிபோதையில் அடித்து உதைத்து சித்திரவதை செய்த கணவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஓழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(45). தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியை கலைச்செல்வி(38). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஏழுமலை அடிக்கடி வீட்டிற்கு மனைவியிடம் தகராறு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், வழக்கம்போல குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஏழுமலை குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் இல்லை என கலைச்செல்வி கூறியதால் ஆத்திரத்தில் அடித்து உதைத்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த கலைச்செல்வி கணவரின் கழுத்தை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மனைவி கலைச்செல்வியை போலீசார் கைது செய்தனர். கணவனை மனைவியே குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!