சமையல் செய்யாததை தட்டிக்கேட்டதால் கொடுமை... கணவரை கரண்டியால் வெளுத்து கட்டிய மனைவி..!

Published : May 02, 2019, 03:52 PM IST
சமையல் செய்யாததை தட்டிக்கேட்டதால் கொடுமை... கணவரை கரண்டியால் வெளுத்து கட்டிய மனைவி..!

சுருக்கம்

உணவு சமைக்க தாமதமானதை தட்டிக்கேட்ட கணவனை கரண்டியால் தாக்கியதால் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உணவு சமைக்க தாமதமானதை தட்டிக்கேட்ட கணவனை கரண்டியால் தாக்கியதால் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள பொன்னுவேல்புரத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வருபவர் கார்த்தி. இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர்கள் வீடு இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள தனது சித்தியின் பழக்கடைக்கு தனலட்சுமி அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் வீட்டில் நேரத்திற்கு சமையல் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து கார்த்திக், தனலட்சுமியை அவ்வப்போது தட்டிக் கேட்டு வந்துள்ளார். இன்று வேலைக்கு கிளம்பும் நேரத்திலும் பழக்கடைக்கு தனலட்சுமி சென்றுள்ளார். பின்னர் வீடு வந்த தனலட்சுமியிடம் தாமதமாகி விட்டதை உணர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது தனலட்சுமியின் சித்தி அபிராமியும் அங்கு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமான தனலட்சுமி தனது கணவர் கார்த்தியின் நெற்றியிலும், இடது கையிலும் அடித்துள்ளார். கார்த்திக் காயம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மனைவி தனலட்சுமி மற்றும் அவரது சித்தி அபிராமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?