காதல் மனைவி வேறொவருடன் கள்ளத்தொடர்பு..? சதக் சதக் என கொடூரமாக குத்திக்கொன்ற கணவர்..!

Published : Nov 11, 2019, 02:26 PM ISTUpdated : Nov 11, 2019, 02:28 PM IST
காதல் மனைவி வேறொவருடன் கள்ளத்தொடர்பு..? சதக் சதக் என கொடூரமாக குத்திக்கொன்ற கணவர்..!

சுருக்கம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேற்கு வீதியை சேர்ந்தவர் நிஷார் அகமது (37). கழிவு குடோன் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஹசினா (21) என்பவரை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயது மகன் உள்ளார். நிஷார் அகமதுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. 

காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேற்கு வீதியை சேர்ந்தவர் நிஷார் அகமது (37). கழிவு குடோன் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஹசினா (21) என்பவரை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயது மகன் உள்ளார். நிஷார் அகமதுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. 

இதனிடையே, காதல் மனைவியின் நடத்தையில் கணவர் நிஷார் அகமதுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நிஷார் அகமது மனைவியை கத்தியால் கொடூரமாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹசினா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

பின்னர், பயந்து போன நிஷா அகமது தனது கழுத்தை கத்தியால் தனக்கு தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, 2 வயது குழந்தை தாயின் உடல் அருகே அழுது கொண்டு இருந்தது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இதுதொடர்பாக உடனே போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹசினா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிஷார் அகமதுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி