கள்ளக்காதல் விவகாரத்தில் காதல் மனைவி கொலை.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு என்ன தெரியுமா?

Published : Feb 17, 2023, 02:38 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் காதல் மனைவி கொலை.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு என்ன தெரியுமா?

சுருக்கம்

அம்முவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி திரிந்தும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். 


சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(34). இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அம்மு(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், அம்முவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி திரிந்தும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். 

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளலாம் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டியா என கூறி மனைவியை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கொடூரமாக கத்தியால் குத்திக்கொலை செய்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக கணவர் சீனிவாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,  கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் சீனிவாசன் மனைவியை கொலை செய்துள்ளார். எனவே அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!