தாறுமாறு போதை, தலைகேறிய குடிவெறி... மனைவியை கதற கதற உயிருடன் எரித்த கொடுமைக்கார கணவன்...!!

Published : Jan 20, 2020, 04:53 PM IST
தாறுமாறு போதை,  தலைகேறிய குடிவெறி... மனைவியை கதற கதற உயிருடன் எரித்த கொடுமைக்கார கணவன்...!!

சுருக்கம்

குடிபோதையில் மனைவியை உயிரோடு எரித்து கணவன் கொலை செய்துள்ள பயங்கர சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  வெறிச் செயலில் ஈடுபட்ட கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . 

குடிபோதையில் மனைவியை உயிரோடு எரித்து கணவன் கொலை செய்துள்ள பயங்கர சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  வெறிச் செயலில் ஈடுபட்ட கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .  நெல்லை அருகே சீதபற்பநல்லூர் அடுத்துள்ள கீழ கருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35) இவர் அதே ஊரில் கூலித் தொழில் செய்து வருகிறார் .  மனைவி ஜெயா (31) இத் தம்பதியருக்கு இரண்டு பெண்  குழந்தைகள் மற்றும் ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது . 

 

கூலி வேலை செய்யும் சுரேஷ் அன்றாடம் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .  இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று  குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவி ஜெயாவிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளார் ,   வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது இதில் ஜெயாவை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளார் ,  ஒருகட்டத்தில் குடிவெறி தலைக்கேறியதில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சுரேஷ் , ஜெயா மீது ஊற்றி தீ  வைத்து எரித்ததாகத் தெரிகிறது . இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் ஜெயா அலறி துடித்தார் .  தன்னை  காப்பாற்றும்படி  அபயக்குரல் எழுப்பினார் . அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஜெயாவின் நிலைமையை கண்டு அதிர்ந்தனர் .  அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர் . 

அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .  இதுதொடர்பாக சீதபநல்லூர் போலீசார் சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் .  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயா அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  ஜெயா கொடுத்த வாக்குமூலத்தில் கணவர் தன்னை தீ வைத்து எரித்ததாக கூறியிருந்தார்.   இதனையடுத்து சுரேஷ் மீது கொலை வழக்கு  செய்யப்பட்டது ,  குடிவெறியில் கணவனே மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?