பேதி மருந்து கொடுத்த மனைவிகள்.. ஆத்திரத்தில் தாக்கிய கணவன்... முதல் மனைவி உயிரிழப்பு!!

Published : Aug 28, 2019, 11:30 AM ISTUpdated : Aug 28, 2019, 11:36 AM IST
பேதி மருந்து கொடுத்த மனைவிகள்.. ஆத்திரத்தில் தாக்கிய கணவன்... முதல் மனைவி உயிரிழப்பு!!

சுருக்கம்

திருப்பூரில் இரண்டு மனைவிகள் சேர்ந்து பேதி மாத்திரை அளித்ததால் ஆத்திரமடைந்த கணவர் தாக்கியதில் முதல்  மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சாந்தி, திலகவதி என்று இரண்டு மனைவிகள். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். சொந்தமாக கோழி கடை நடத்தி வருகிறார்.

ரமேஷ் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது. இரண்டு மனைவிகளையும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார். குடியை நிறுத்துமாறு அவர்கள் பலமுறை கூறியும் ரமேஷ் கேட்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் குடித்து விட்டு வந்து சண்டை போட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த இரண்டு மனைவிகளும் அவருக்கு பேதி மருந்தை தெரியாமல் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் இருவரையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார். பலத்த காயமடைந்த முதல் மனைவி சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திலகவதி மயக்கமடைந்து இருக்கிறார்.

சாந்தி இறந்து விட்டதையடுத்து ரமேஷ், திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சென்று சரணடைந்தார். ரமேஷின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர்  திலகவதியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இரண்டு மனைவிகள் கொண்ட கணவன் தாக்கியதில் முதல் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்