மனைவியை நண்பர்களுக்கு விருந்து வைத்த சைகோ கணவன்.!! சம்மதிக்காததால் கழுத்தை அறுத்து கொரூர கொலை...! தேடுகிறது போலீஸ்...!

Published : Aug 28, 2019, 10:37 AM IST
மனைவியை நண்பர்களுக்கு விருந்து வைத்த சைகோ கணவன்.!!  சம்மதிக்காததால் கழுத்தை அறுத்து கொரூர கொலை...! தேடுகிறது போலீஸ்...!

சுருக்கம்

 ”எனக்கு எல்லாமே என் நண்பர்கள் தான், அவர்கள் எதைக்கேட்டாலும் நீ செய்துதான் ஆகவேண்டும் விருப்பம் இருந்தால் இரு இல்லை என்றால் போ” என்று கூறி தகராறில் ஈடுபட்டதுடன், புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி வற்புறுத்தினார், ஆனால் அதை மணிமேகலை கேட்கவில்லை, 

வீட்டில் உடை மாற்றும் போது திடிரென வீட்டிற்க்குள் நுழைந்த கணவரின் நண்பர் மீது புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மதுவுடன் சேர்த்து மனைவியையும் நண்பர்களுக்கு விருந்து வைக்க உதயகுமார் திட்டமிட்டிருந்தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் உதயகுமார் , மனைவி  மணிமேகலை(25)  இரண்டு் வயதில் ஒரு ஆண் குழந்தையுடன் அப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக  வசித்து வந்தனர். மது பழக்கத்திற்கு அடிமையான உதயகுமார் தினமும் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து தனது வீட்டு வாசலில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் உதயகுமார் தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து வீட்டு வாசலில் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனை கண்ட மணிமேகலை தனது கணவரை திட்டியதுடன் அவரது நண்பர்களையும் வசைப்பாடிவிட்டி வீட்டிற்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மணிமேகலை வீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது உதயகுமாரின் நண்பர் மாணிக்கவேல் என்பவர் வீட்டினுள் நுழைந்துள்ளார்,  அப்பொழுது மாணிக்கவேலை மணிமேகலை திட்டியதாக தெரிகிறது. தான் ஆடை மாற்றும்போது வீட்டிற்குள் நுழைந்ததை கண்டித்த மணிமேகலையை நண்பரின் மனைவி என்றும் பாராமல் மாணிக்கவேல் தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால்  மனமுடைந்த மனிமேகலை இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில்புகார் அளித்தார். 

நண்பர் மணிக்கவேல் மீது தனது மனைவி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளதை அறிந்த கணவர் உதயகுமார் ஆத்திரமடைந்தார்.பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் ”எனக்கு எல்லாமே என் நண்பர்கள் தான், அவர்கள் எதைக்கேட்டாலும் நீ செய்துதான் ஆகவேண்டும் விருப்பம் இருந்தால் இரு இல்லை என்றால் போ” என்று கூறி தகராறில் ஈடுபட்டதுடன், புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி வற்புறுத்தினார், ஆனால் அதை மணிமேகலை கேட்கவில்லை, இதானல் ஆத்திரத்தின் உச்சிக்கேச் சென்ற உதயகுமார். மறைத்து வைத்திருந்த கத்தியால்   மணிமேகலையின் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். பிறகு அவரன் கழுத்தை கறகறவென அறுத்து கீழே தள்ளினார். 

மணிமேகலையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது மணிமேகலை ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மணிமேகலையை சென்னை சென்ட்ரலில் உள்ள இராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மனைவியை கத்தியால் குத்திய கணவர் உதயகுமார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிமேகலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள உதயகுமார் மற்றும் அவரது கொலைக்கு காரணமான அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்