காதலனுடன் சேர்ந்து வாழ மனைவி போட்ட ஸ்கெட்ச்... கணவனை குடிக்க வைத்து நடு காட்டில் பயங்கரம்.

Published : Aug 02, 2022, 08:02 PM ISTUpdated : Aug 02, 2022, 08:52 PM IST
காதலனுடன் சேர்ந்து வாழ மனைவி போட்ட ஸ்கெட்ச்... கணவனை குடிக்க வைத்து நடு காட்டில் பயங்கரம்.

சுருக்கம்

கள்ளக்காதலன் மூலம் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.  

கள்ளக்காதலன் மூலம் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

சமூகத்தில் பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கள்ளக்காதலன் மூலம் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-  தெலுங்கானா மாநிலம்  கமரெடி மாவட்டம் பிச்சுக் கொண்டவை சேர்ந்தவர் போதன் ஹனும பாய், இவருக்கும்- அனுராதா என்ற பெண்ணுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்தது. தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

திருமணமான சில ஆண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் பகுதியில் வசிக்கும் போஷா பாய் என்ற இளைஞருடன் அனுராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது,  இந்நிலையில் முழுநேரமாக கள்ளக்காதலுடன் வாழ அனுராதா முடிவெடுத்தார், அதற்கு தடையாக உள்ள கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். தனது கணவனை எப்படியாவது தீர்த்துக்கட்டுமாறு கள்ளக் காதலனிடம் கூறினார். அதை ஏற்ற கள்ளக்காதலன் அனுராதாவின் கணவர் ஹனுமா பாய் கொல்ல திட்டம் தீட்டினார்.

இதையும் படியுங்கள்:  ஐஐடி மாணவியை இருட்டில் வைத்து பலான இடங்களில் கை வைத்து வக்கிரம்.. கேண்டின் ஜூஸ் மாஸ்டர் கைது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனும பாயை, காதலன் போஷா பாய் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் மது அருந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர் அங்கு மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தினர், ஹனும பாய் அதிகமாக குடித்ததால் அவருக்கு போதை தலைக்கேறியது, இந்நிலையில் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றனர். பின்னர் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு அவரின் செல்போனை எடுத்துக்கொண்டு கள்ளக்காதலன் போஷா பாய் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் அனும்பாய் செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கயிறு பொல்லாக் பள்ளி மஞ்சிரா ஆற்றில் வீசினர், பின்னர் அங்கிருந்து பக்கத்து ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று பதுங்கினர். இந்நிலையில் தெளல்தாபாத்  வனப்பகுதியில் கொலை அனும பாய் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், மனைவி அனுராதா மீது சந்தேகம் ஏற்பட்டது, அவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததார், போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தனர், அப்போது காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இதையும் படியுங்கள்: 10 வருஷம் முன்னாடியே என்ன நாசம் பண்ணாரு இப்ப என் தங்கச்சிய.. செ*** சைகோவாக மாறிய தந்தை மீது மகள் புகார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!