கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளை கைது செய்தது ஏன்... உயர்நீதி மன்ற நீதிபதி ஆவேசம்.

Published : Aug 24, 2022, 02:55 PM IST
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளை கைது செய்தது ஏன்... உயர்நீதி மன்ற நீதிபதி ஆவேசம்.

சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் கணியமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் கணியமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது இந்த வழக்கில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்  கன்னியாகுமரியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, மாணவி  பள்ளிக்கூடத்தில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது, ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய பெற்றோர்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனவலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி கொலை செய்யப்பட்டு விட்டதாக கூறி ஏராளமான  பொதுமக்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். இதடையடுத்து அது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல மாணவி மரணம் தொடர்பாக 2 முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது, இரண்டாவது உடற்கூறு ஆய்வு அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 5 பேரும் ஜாமீன் கோட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது தங்கள் எதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை., மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் உள்ளது, அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி வசம் ஒப்படைத்துவிட்டோம், சிசிடிவி கேமரா காட்சிகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, எனவே  தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர்கள்  தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது,

அப்போது  மாணவியின் பெற்றோர்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம், எனவே இந்த வழக்கில் காவல்துறை விசாரணை முடியும்வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர், இந்நிலையில் இதில் காவல்துறையில் நிலைப்பாடு என்ன  என நீதிபதி கேள்வி எழுப்பினார், அப்போது அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் அது குறித்து சிபிசிஐடி தரப்பில் கேட்டு  கேட்டு தெரிவிப்பதாகவும், அதற்கு அவகாசம் வேண்டும் என்றும் கூறினார் .

அதில் அதிருப்தி அடைந்து நீதிபதி, இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று  முன்கூட்டியே வழக்கு ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே அதற்கான தகவலை கேட்டு பெற்றிருக்க வேண்டாமா? பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்ற விவரத்தை கேட்டு  வரும் வெள்ளிக்கிழமை தெரிவிக்க வேண்டுமென காவல்துறை தரப்பிற்கு உத்தரவிட்டார். பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.  
 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி