சப்-இன்ஸ்பெக்டரை நான் ஏன் வெட்டிக் கொன்றேன்... மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Nov 23, 2021, 12:00 PM IST
சப்-இன்ஸ்பெக்டரை நான் ஏன் வெட்டிக் கொன்றேன்... மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

சுரங்கப்பாதையில் தண்ணீர் இருந்ததால் தப்பிச் செல்ல வழியில்லாமல் சிக்கிக்கொண்டோம். எனது தாய்க்கு இதனை சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் போன் சொன்னார்.  

திருச்சி நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றபோது திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆடுகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். 

இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர். திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டது எப்படி?.. திருச்சி டிஐஜி பரபரப்பு தகவல் சம்பவ இடத்தில் ஆய்வு இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதையடுத்து தஞ்சை கல்லணை பகுதியை சேர்ந்த ஆடு திருடும் கும்பலை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்பட 19 வயதான மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் கூறுகையில், ’’ஆடுகளை திருடி விற்று வந்தேன். ஆடுகளை சமயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்தேன். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும் அழைத்துக்கொண்டு செல்வேன். பல இடங்களில் திருடியும் இதுவரை  போலீசாரிடம் சிக்கவில்லை. 

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தோகூரில் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக வந்தோம். அப்போது போலீசார் வழிமறித்தபோது வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து சென்றோம். அதேநேரத்தில் வண்டியில் இருந்த 2 சிறுவர்களையும் ஆட்டை இறுக பிடித்துக்கொள்ளச் சொன்னேன்.

சுரங்கப்பாதையில் தண்ணீர் இருந்ததால் தப்பிச் செல்ல வழியில்லாமல் சிக்கிக்கொண்டோம். எனது தாய்க்கு இதனை சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் போன் சொன்னார்.  கைதாகி சிறைக்கு சென்றுவிடுமோ? என பயம் வந்து விட்டது. அப்போது தான் கல்லால் பூமிநாதனின் தலையில் தாக்கியும், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்தும் அவரது தலை, கழுத்தில் பலமாக வெட்டினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்தார். கொலை செய்த உடன் அதே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் தப்பிச் சென்றோம்.

எனது சொந்தக்காரர் ஒருவர் இறந்த துக்க காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்ததால் செலவுக்காக ஒரு ஆட்டை திருடினோம். அந்த ஆட்டை கீரனூர் பகுதியில் ஒருவரிடம் விற்றோம்’’ என மணிகண்டன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..