அத்திவரதர் தரிசனம்... ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு விவிஐபி பாஸ் வாங்கிக் கொடுத்த திமுக..?

By Thiraviaraj RMFirst Published Jul 20, 2019, 3:51 PM IST
Highlights

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்ய அழைத்து வந்ததே திமுகதான் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியுள்ளார். 

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்ய அழைத்து வந்ததே திமுகதான் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியுள்ளார்.

 

அத்திவரதரை தரிசிக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், வரிச்சியூர் செல்வத்திற்கு பிரதமர், ஜனாதிபதி, கவர்னர், நீதிபதிகளுக்கு வழங்கும் வி.வி.ஐ.பி. பாஸ் கிடைத்தது எப்படி? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்நிலையில், வரிச்சியூர் செல்வத்தை கூட்டி வந்ததே திமுகவினர் தான் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னயாதான் வரிச்சியூர் செல்வத்துக்கு வி.வி.ஐ.பி. பாஸ் வழங்கினா. ஆட்சியர் பொன்னாயாவும், வரிச்சியூர் செல்வமும் ஏற்கனவே நண்பர்கள்’’ எனக்கூறுகிறார்கள்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள். 

திமுகவை சேர்ந்த பிரபல ப்ராபள ரவுடி "வரிச்சியூர் செல்வம்" VIP தரினசத்தில் அத்திவரதரை தரிசித்துள்ளார்.

அதற்க்கு உபி கள் உதவியாகவும், உடைந்தயாகவும் இருந்துள்ளனர்.

பேரறிஞர் அண்ணா கண்ட இயக்கம் இன்று ரவுடிகளுக்கு ஏன் துணை போகிறது? || ||

😒 😒 🚶 🚶 pic.twitter.com/x7mrO7TV9c

— M.GOKUL Kannan (@Gokul_Ammk)

"காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் பொன்னையா இதற்கு முன் ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாபெரும் ஊழலிலும் இவரது பங்கு அதிகம். இவரைவிட, பல சீனியர் அதிகாரிகள் இருந்தாலும் இவர் ஐ.ஏ.எஸ் ஆன ஆறு மாதத்திலேயே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பதவியை பிடித்தார். நேர்மையாக செயல்படுகிறார் என்பதற்காகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமாரை திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றிவிட்டார். 

திமுகவால் என்ன செய்ய முடியும் என்று கேட்டவர்களுக்கு இதோ பதில்.

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்ய அழைத்து வந்ததே திமுகதான் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியுள்ளார். pic.twitter.com/voW7KWEwq2

— find me (@coolsandira)

மாவட்ட ஆட்சியரான ஒரு வருடத்திலேயே ஆட்சி மேலிடத்துக்கு விசுவசாமாக இருந்ததால் 'சிறந்த ஆட்சியர்’ விருது வாங்கினார். வரிச்சியூர் செல்வமும், ஆட்சியர் பொன்னையாவும் திமுக ஆதரவாளராக இருந்த அடிப்படையிலேயே பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வி.வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது" என்கிறார்கள்.
 

click me!